தோழர் பவானிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கட்சிக்கொடி போத்து இறுதி அஞ்சலி மரியாதை!
Tuesday, July 2nd, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு பிரதேச நிர்வாக செயலர் தோழர் பவானியின் இறுதிக் கிரியைகள் இன்று மருதங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இன்னிலையில் இன்றையதினம் இறுதி நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கிலுள்ள அன்னாரது இல்லத்தில் கட்சியின் தோழர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தமது இறுதி மரியாதையைச் செலுத்தினார்கள்
அமரர் தோழர் பவானியின் புதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்சிக்கொடி போர்த்தி கட்சியின் பூரண அஞ்சலி மரியாதையை செலுத்தியதுடன் மலர்வளையம் சாத்தி மலர்மாலை அணிவித்து தமது இறுதி அஞ்சலிமரியாதையையும் செலுத்தியிருந்தனர்..
இதேநேரம் அமரர் பவானி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர், மற்றும் வடமராட்சி நிர்வாக செயலாளர் ஆகியோர் நினைவுரை ஆற்றினர்.
அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அஞ்சலிச் செய்தியும் இதன்போது வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச நிர்வாக செயலாளர் சரவணபவானந்தன் சிவகுமார் (பவானி) சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
கடந்த 2024.06.20 திகதி அன்று இரவு 09 மணியளவில் வத்திராயன் வடக்கு வேம்படி பகுதியில் உள்ள தனது மீனவர் வாடியில் தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த போது இவர் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் எரிந்த நிலையில் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தார்
பின்னர் அவரது உடலில் ஏற்பட்டிருந்த எரிகாயங்களின் தாக்கம் அதிகளவாக இருந்தமையை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விசேட சிகிசசைக்காக கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இவர்மீதான தாக்குதல் பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளதாக பலரம் தெரிவிக்கின்ற நிலையில் நேற்று 2024.06.30 முன்னிரவு 9.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இதேநேரம் இவர் சட்ட விரோத கடற்தொழில் தொடர்பாக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


