தோழர் தவநாதனின் தாயார் காலமானார்!
Sunday, January 9th, 2022
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாசபையின் முன்னாள் உறுப்பினருமான தோழர் தவநாதனின் பாசமிகு தாயார் வைரவநாதன் பார்வதிப்பிள்ளை இன்றையதினம் (08.01.2022) காலமானார்.
அன்னாரின் மறைவு குறித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை செலுத்துவதுடன் அவரது பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினரது துயரில் தாமும் பங்கெடுத்துக் கொள்கின்றது.
கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகக் கொண்ட அமரர் வைரவநாதன் பார்வதிப்பிள்ளை வயது மூப்பின் காரணமாக இன்றையதினம் காலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
000
Related posts:
எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை!
கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில் புதிய நேர அட்டவணை - புகையிரத திணைக்களம் தெரிவி...
டிப்பரில் மணலை கடத்தியவர்கள் செயலால் தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதம் - சிறுப்பிட்டி பகுதியில் போக்குவ...
|
|
|


