தொழிலற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை – திங்கட்கிழமை ஆரம்பம்!
Sunday, April 15th, 2018
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் வெளியான பத்திரிகை அறிவித்தலுக்கு அமைய விண்ணப்பித்த தொழிலற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை (நாளை) ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாவட்ட மட்டத்தில் நேர்முகப் பரீட்சை இடம்பெறும் என்று தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நேர்முகப்பரீட்சை தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் விண்ணப்பதாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.
நேர்முகப் பரீட்சை மாவட்ட செயலகங்களில் இடம்பெறும். கொழும்பு மாவட்டத்தில் தொழிலற்ற பட்டதாரிகளை பயிற்றுவிப்பதற்கான நேர்முகப் பரீட்சை கொழும்பு மாவட்ட செயலகத்திலும் மஹரகம பிரதேச செயலகத்திலும் இடம்பெறும்.
காலி மாவட்டத்தில் இந்த நேர்முகப்பரீட்சை கோல்டிஹோல் மண்டபத்திலும் அம்பாறை மாவட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை ஹாடி உயர்தொழில்நுட்ப கல்லூரியிலும் இடம்பெறும். அனுராதபுரம் மாவட்டத்திற்கான நேர்முகப்பரீட்சை வலிசிங்ஹ ஹரிஷ்சந்திர மகாவித்தியாலயத்தில் இடம்பெறும்.
Related posts:
|
|
|


