தொல்பொருளை சேதப்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர், விதுர விக்ரமநாயக்க அறிவிப்பு!

Thursday, August 24th, 2023

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் தொல்பொருள் அழிப்பு தொடர்பான, தகவல்கள் கிடைக்கப்பெற்று வருவதாக, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர், விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் திணைக்களத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் சேதப்படுத்தல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், இன்று நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களை சேதப்படுத்துவோருக்கு எதிராக, கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில், பல வருடங்களாக தொல்பொருள் சின்னங்கள் பெருமளவில் அழிக்கப்படுகின்றமை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வின் போது, தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குருந்தி விகாரை தொடர்பில், இருவேறு வழக்குகள் இடம்பெறுவதால், அது குறித்து எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர், விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: