தொற்றுறுதியான நபருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை!
 Monday, February 21st, 2022
        
                    Monday, February 21st, 2022
            
ஒரு மாதத்திற்குள்ளான காலப்பகுதியில் ஏற்கனவே தொற்றுறுதியான நபருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுகாதார வழிகாட்டுதல்களை உரிய வகையில் பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என குறிப்பிட்டார்.
இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இருந்தால் உனடியாக அதனை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இதுவரை நான்காம் தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பான எந்தவொரு சுற்றுநிருபமோ, அறிவுறுத்தல்களோ வெளியிடப்படவில்லை எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் - முன்னாள் தளபதி!
கோண்டாவில் பகுதியில் முறுகல் நிலை:  இருவர் கைது!
கொரோனா பேரழிவைக் கட்டுப்படுத்த இலங்கையில் வலுவான சுகாதார கட்டமைப்பு  உள்ளது -  ஜெனிவாவில் அமைச்சர் க...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        