தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் முடக்கப்படலாம் – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீண்டும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால், குறித்த பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்’ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட மாட்டார்கள் என்று கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அவர்களின் தொடர்புகள் குறித்து ஆராய்ந்த பின்னர் பெருமளவானவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமென கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய தேவையேற்படின் மீண்டும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை இல்லை என்றால் தனிமைப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறதாக தெரிவித்த அவர் மத்திய கிழக்கிலிலிருந்து மாத்திரமின்றி ஏனைய நாடுகளிலிருந்தும் இலங்கையர்கள் அடுத்த வாரம்முதல் அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|