தேர்தல் வராவிட்டல் தமிழ் அரசியல் கைதிகளை மறந்திருப்பர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்!
Sunday, June 14th, 2020
தமிழ் தேசிய கூட்டமைப்பினர்களது உறுப்பினர்கள் ஒருசிலரது பாதுகாப்பை முன்னிறுத்தி சுமார் இருபது முன்னாள் போராளிகள் அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இவ்வாறு சிறையில் வாடுபவர்களில் பெரும்பாலானோர் யுத்தத்தில் அங்கவீனமானோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தங்களை கூறிக்கொள்ளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கும் வரை முன்னாள் போராளிகளுக்கு அச்சுறுத்தலாகவே இருக்குமென்பதை மேற்கோள் காட்டி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான விஷேட பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேச்சுக்களை நடத்தியதுடன் அவர்களது விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றையும் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் இதே கூட்டமைப்பின் பிரதிநிதியொருவர் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் விடுதலை தொடர்பில் தானும் பிரதமரை சந்தித்து தேர்தல் நாடகம் ஒன்றை ஆடியிருக்கின்றார் என தமிழ் மக்களிடையே அரசல் புரசலாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


