தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்களைப் பயன்படுத்த தடை!

Thursday, September 12th, 2024

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த ஹேரத்தினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியாது எனவும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையிலேயே, தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, தேர்தல் நடவடிக்கைகளில் சிறுவர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் எனத் தேர்தல்கள் கண்கணிப்பு அமைப்புகள் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

000

Related posts: