தேர்தலை முன்னிட்டு நடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் இரு தினங்கள் பூட்டு!

Tuesday, August 4th, 2020

நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளையும், நாளை மறுதினமும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபான உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் விற்பனை நிலைய அனுமதி பத்திரமும் இரத்து செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் 1913 இலக்கத்தின் ஊடாக முன்வைக்க முடியும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பாதுகாப்பினை பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங்கள் தோற்றம் பெறுவதை தவிர்ப்பதற்கு இரண்டு நாட்கள் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மதுவரி திணைக்களத்துக்கு எழுத்து மூலமாக அறிவித்தது

Related posts: