தேர்தலுக்கான பண விவகாரத்தில் தலையிடுங்கள் – சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!

உள்ளூராட்சித் தேர்தலுக்கான பணம் தொடர்பான பிரச்சினையில் தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
நேற்றிரவு இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தல் அன்றையதினம் நடைபெறாது என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயங்கள் காரணமாக உறைய தினத்தில் வாக்கெடுப்பை நடத்த முடியாது என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மே தின ரயில் சேவை: 6இலட்சத்து 25ஆயிரத்து 875 ரூபா வருமானம்!
அணு ஆயுதங்கள் கிடைக்காது - டிரம்ப் உறுதி!
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
|
|