தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
 Saturday, February 11th, 2023
        
                    Saturday, February 11th, 2023
            
நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்கு முன்னர் வடக்கு மாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்தளவிலான பங்களிப்பை வழங்கியது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த பலமான பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், பொருளாதார அபிவிருத்தியம் அவசியம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம் மக்களின் மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பில் தங்கியுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
யாழ். கடற்பரப்பில் மிதந்து வந்த பானத்தை அருந்தியவர் மரணம் !
2020 க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான விசேட அறிவித்தல்!
மறுசீரமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் - அமைச்சர் காஞ்சன விஜேசேகர...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        