தேசிய பாடசாலைகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை!
Monday, April 24th, 2017
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் ஆகக்கூடிய பெறுபேறுகளைப் பெற்று உயர்தர கல்வியைத் தொடர்வதற்காக தேசிய பாடசாலைகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, சில பாடசாலைகளில் அதற்கான நேர்முகப் பரீட்சை தற்போது நடைபெறுகிறது.
சில தேசிய பாடசாலைகளில் இதற்கான நேர்முகப் பரீட்சைகள் இரண்டாம் தவணைக்கான பாடசாலை ஆரம்பமாகும் காலப்பகுதியின் பின்னர் நடைபெறுமென்று தேசிய பாடசாலைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்தார். உயர்தர வகுப்புக்களில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணி ஜுன் மாதத்தில் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
Related posts:
அரசியல்வாதிகளின் சுயநலத்தால் திரும்பிச் சென்றது இந்தியன் வீட்டுத்திட்டம் – ஜனாதிபதி!
பரீட்சை நேரத்தில் கூட மின்வெட்டு தவிர்க்க முடியாதது - எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது - சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர...
|
|
|


