தேசிய எல்லை நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கை செவ்வாய்க்கிழமை பிரதமரிடம் கையளிப்பு!
Sunday, February 26th, 2023
தேசிய எல்லை நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாவட்ட ரீதியாக தங்களது குழுவினால் பெறப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை பரிசீலனை செய்ததன் பின்னர் இந்த பணி இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக மாவட்ட ரீதியாக சென்று தகவல் பெறப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் எல்லை நிர்ணய சபையின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச பல்கலைக்கு செல்ல முடியாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் -அமைச்சர் திஸாநாயக்க!
மிகபெரிய சொகுசு பயணக் கப்பலில் கொரோனா வைரஸ்? - 7000 பேர் அவதி!
அடுத்த வருட இறுதியில் பணவீக்கம் 5 வீதமாக குறையும் - மத்திய வங்கி ஆளுநர் ஆரூடம்!
|
|
|


