தேசிய அரசியலை எமது  மக்களுக்காக  பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் நாம்  – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Sunday, February 19th, 2017

 

எமது கட்சிக்கென்று ஒரு வரலாறு உண்டு. அதற்கு தெளிவான கொள்கையும் இலக்கும் வகுத்து எமது ஜனநாயக வழிமுறை பயணத்தில் எமது தோழர்கள் கொடுத்த  அர்ப்பணங்களையும் தியாகங்களையும் நினைவில் நிறுத்தி இலட்சியப் பயணத்தை நாம் நம்பிக்கையுடன் முன்னெடுத்து வருகின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சாவகச்சேரி அலுவலகத்தில் இடம்பெற்ற பிரதேசத்தின் வட்டார செயலாளர் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

அந்தவகையில் தேசிய அரசியல் நீரோட்டத்தை எமது மக்களுக்காக பயன்படுத்தியதில் வெற்றிகண்டுள்ளோம். மாறாக வெட்டிப் பேச்சுக்களைப் பேசி கனிந்துவரும் சந்தர்ப்பங்களை தடுத்து நிறுத்தி மக்களை வெறுவிலிகளாக்குபவர்களாக நாம் ஒருபோதும் செயற்பட்டது கிடையாது .

கடந்த காலங்களில் எமது மக்கள் கண்டுவந்த துயர்களையும் மாறா வடுக்களையும் பாடங்களாக வைத்து ஒரு எதிர்கால தூரநோக்கம் கொண்ட அரசியலை மேற்கொண்டுவருகின்றோம். இதனால்தான் நாம் முன்னெடுத்துச் சென்ற அரசியல் வழிமுறை என்றும் சாத்தியமானதாக காணப்படுகின்றது

மக்கள் நலன்கள்மீதும் எமது உரிமை சார் அரசியல்தீர்வு மீதும் அதிக அக்கறைகொண்ட எமது அணுகுமுறைகளால்தான் மாற்றுத் தமிழ் அரசியல் தரப்பினர் காலத்திற்கு காலம் எமது கட்சி மீது அவதூறுகளையும் பொய்ப் பிரச்சாரகளையும் திட்டமிட்ட வகையில் பரப்பி தமது அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக் கொள்கின்றனர். ஆனால் நாம் அற்பர்களது பேச்சுக்களில் அடிபட்டு போபவர்கள் அல்லர்.

உங்களது வாழ்க்கை வளமாகுவதற்கான பாதை உங்களிடமே உள்ளது. கடந்த காலங்களில் உங்களது தவறான அரசியல் தெரிவுகளால்தான் இன்றுவரை அழுகுரல்களும் அவலங்களும் வாழ்வில் மறையாதிருப்பதற்கு காரணம். எமது கரங்களுக்கு உங்களது அரசியல் ஆதரவை பலமாக தருவீர்களானால் நிச்சமாக நீங்கள் கண்ட கனவுகள் அனைத்தைம் நாம் வென்றெடுத்து காட்டுவோம்.

இச்சந்திப்பின் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்  கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கட்சியின் சாவகச்சேரி நகர  நிர்வாக செயலாளர் அமீன், சாவகச்சேரி பிரதேச நிர்வாக செயலாளர் மெடிஸ்கோ, அகியோர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

16807814_620453174820213_6014621513696567518_n

16807265_620452754820255_7225727188808690536_n

Related posts:


ஆசிரியர்களின் செயற்பாடுகளால் பகடையாக்கப்படும் 43 இலட்சம் மாணவர்கள் - அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்...
வெளிநாடு செல்ல தயாராகும் ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் - கல்வி அமைச்சிடம் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளத...
ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவை கோர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்...