தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டத்தின் முதல் தவணை இம்மாதம் முதல் வாரத்திற்குள் வழங்க நடவடிக்கை – நலன்புரிச் சபை அறிவிப்பு!

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அஸ்வெசும நலத்திட்டத்தின் முதல் தவணை இம்மாதம்முதல் வாரத்திற்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரிச் சபை தெரிவித்துள்ளது.
95 சதவீத பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கு அரச வங்கிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அச்சபை தெரிவித்துள்ளது.
பயனாளிகளுக்கு 15,000 ரூபாய் 8,500 ரூபாய் மற்றும் 5,000 ரூபாய் மதிப்புகளின் கீழ் தவணை பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் பெற்றுக்கொள்ளப்பட்ட மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆய்வு செய்த பின்னர் அஸ்வெசும நலத்திட்டத் திட்டத்திற்கு மேலதிக பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
2 வாரங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள்!
எரிபொருள் - சமையல் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு ஏழுமாதங்களாகும் - அமைச்சர் காமினி லொக்குக...
ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார சு...
|
|