தென்னை உற்பத்தி 18.6 சதவீதத்தினால் வீழ்ச்சி!
Tuesday, February 27th, 2018
நாட்டில் தென்னை உற்பத்தி 18.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வருடத்தில் குறிப்பட்ட காலப்பகுதியில் 3.011 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்பட்டபோதும் தற்போது 2.449 மில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளதாக குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தில் ஏற்பட்ட வரட்சியால் உயர் தென்னை உற்பத்தி பிரதேசமான குருணாகல் மாவட்டத்தில் மாத்திரம் சுமார் ஒரு லட்சம் தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியா உள்ளிட்ட தென்னை உற்பத்தி நாடுகளிலும் வரட்சிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த நாடுகளிலும் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீயினால் பலகோடி சொத்துகள் இழப்பு!
பொது கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவன்ன நியமனம்!
உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் இணைவு!
|
|
|


