தூதரக சேவைகளுக்கான நேர ஒதுக்கீடுக்கு கட்டணம் அறவிடுபவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு கோரிக்கை!

தூதரக சேவைகளுக்கு, நேரத்தை ஒதுக்குவதற்காக கட்டணத்தை அறவிடுபவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு இத்தாலியின் மிலானில் உள்ள இலங்கைக்கான தூதரகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூதரக சேவைகளுக்காக நேரத்தை ஒதுக்குவதற்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் அல்லது நிறுவனம் குறித்த நடவடிக்கைக்கு பணம் அறவிடுவார்களாயின், அவர்கள் தொடர்பான தகவல்களை slcg.milanShmfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு இத்தாலியின் மிலானில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாணவர்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!
தொழில் வாய்ப்புகளை வழங்க பிரதமர் நடவடிக்கை!
சுற்றுலா பயணிகளுக்கு டொலர்களில் பயணச்சீட்டினை விற்பனை செய்வது குறித்து பரிசீலனை – அமைச்சர் பந்துல கு...
|
|