தீ காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்ப பெண் பலி – ஆறுகால்மடம் பகுதியில் சோகம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீ காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஆருசன் தர்சிகா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி மண்ணெண்ணை குக்கரில் சமைப்பதற்காக எண்ணெயை் ஊற்றியபோது குக்கர் தீ பிடித்து எரிந்துள்ளது.
குறித்த அனர்த்தத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தோட்ட தொழிலாளர்களத 2, 500 ரூபா ஊதிய உயர்விற்கு அமைச்சரவை அனுமதி!
பாடசாலைகளுக்கு அண்மையில் சுகரட் விக்க தடை - சுகாதார அமைச்சு!
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு ஆதரவாக வல்வெட்டித்துறை நகர சபையும் போராட்டம்!
|
|