தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் 210 நபர்களின் சொத்துக்களையும் முடக்க அரசாங்கம் நடவடிக்கை!

Tuesday, June 4th, 2024

பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2012 ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 113 பேரின் அனைத்து பணம் மற்றும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 11பேர் குணமடைந்தனர் - தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!
கையிருப்பிலுள்ள தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் - செலுத்திக்கொள்ளாதோருக்கு சுகாதார சேவைகள் பிரதிப்...
பொடம் ட்ரோலிங்கை பயன்படுத்தி நாட்டின் மீன் வளத்தை கொள்ளையடிப்பதைத் தடுக்குமாறு கோரி அடிப்படை உரிமை ...