தீவகம் உள்ளிட்ட குடாநாட்டின் பல பகுதிகளில் கடற்பெருக்கு – கிராமங்களுக்குள் நுழைந்தது கடல் நீர் – அச்சத்தில் மக்கள்!

Friday, October 30th, 2020

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையின் கரையோரப் பகுதிகளிலும் கிராமங்களுக்குள் நீர் நுழைந்துள்ளதால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 03 நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சி பூநகரியின் கௌதாரி முனை வயல்வெளியில் கடல் நீர் புகுந்ததால் நாற்பது ஏக்கருக்கு மேற்பட்ட நெற் செய்கை பாதிக்கப்பட்டது.

அதேபோல நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் நுழைந்ததால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த இரவுமுதல் ஊர்கவாற்றுறையின் கிழக்குப் பகுதி கிராமங்களுக்குள்ளும் கடல் நீர் நுழைந்துள்ளதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அத்துடன் தம்பாட்டிக் கிராமத்தின் கரைப்பகுதியை ஆக்கிரமித்துள்ள கடல் நீர் வீடுகளுக்கு நெருக்கமாக உட்புகுந்துள்ளது.

வழமையாக இந்தக் காலப்பகுதியில் இவ்வாறான நிலை ஏற்பட்டது இல்லை என்று தம்பாட்டியின் மூத்தவர்கள் அருவிக்குத் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் உட்பட்ட பகுதிகளில் அண்மைய மாதங்களாக பெரிய அளவிலான மழை வீழ்ச்சி ஏற்படவில்லை என்பதும் குறிபிடத்தக்கது.

இதனிடையே கல்லுண்டாயில் தண்ணீர் உட்புகுந்தமைக்கு தடுப்பணை உடைந்தமையே காரணம் என்று ஊடகங்களுக்குச் அதிகாரிகள் ரெிவித்திருந்தமை குறீப்பிடத்தக்கது.

Related posts: