திவால் நிலையில் இருந்து விடுவிக்கப்படும் இலங்கை – சர்வதேச நாணய நிதியத்தினால் 28 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தகவல்!
Thursday, June 20th, 2024
இலங்கை எதிர்நோக்கி வரும் வங்குரோத்து நிலையிலிருந்து விரைவில் மீளப் போவதாக மகிழ்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு வருடங்களுக்கும் மேலாக எதிர்நோக்கி வரும் இந்த நிலை முடிவுக்கு வருவதாக அறிவிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமைய, இலங்கையை திவால் நிலையில் இருந்து விடுவிப்பதாக எதிர்வரும் 28 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தினால் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியன்று, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதமையால் திவால் அடைந்த நாடாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பல்கலைக்கு தகுதி பெறாத மாணவர்களுக்காக விசேட வேலைத்திட்டம்!
நாட்டில் அராஜகம் செய்யும் குழுக்களுக்கு கடும் நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
பிராந்திய அமைதிக்காக இந்தியா - மாலைத்தீவு இடையிலான பதட்டத்தைத் தணிப்பதில் சாதகமான பங்கை வகிக்க இலங்க...
|
|
|


