திருமலையில் உணரப்பட்ட புவி அதிர்வு!

திருகோணமலை மாவட்டத்தில் உணரப்பட்ட புவி அதிர்வால் எவ்வித பாதிப்பும் இல்லை என்ற தகவலை திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் கே.சுகுனதாஸ் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நள்ளிரவு புவி அதிர்வு உணரப்பட்டிருந்தது.
இந்த அதிர்வானது கிண்ணியா, மூதூர், திருகோணமலை, லங்கா பட்டிணம், வெருகல் போன்ற பகுதிகளிலேயே உணரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருகோணமலை கடற்படையினர் உடனே எம்மை தொடர்பு கொண்டு இது விடயமாக கேட்டிருந்தனர். இருப்பினும் இது சிறியளவான புவி அதிர்வு என்றும், இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தோம்.
இது விடயமாக தலைமைக் காரியாலயத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதுடன், ஏனைய தகவல்களையும், மேலதிக விபரங்களையும் விரைவாக ஊடகத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மாசி முதலாம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை தேசிய கொடியை பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்!
காணாமல்போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் வழங்க எவ்வித எதிர்ப்பும் கிடையாது - அமைச்சர் கெஹெலிய ரம்புக...
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தவறாக வழிநடத்தினார்...
|
|