திருத்தியமைக்கப்பட்ட புதிய வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, September 13th, 2016

திருத்தப்பட்ட வற் வரி சட்டமூல பத்திரத்துக்கு அமைச்சரவை இன்று (13) அங்கீகாரம் வழங்கியுள்ளது. வற் வரி வீதத்தை 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கான, திருத்தச் சட்டத்துக்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

இன்றையதினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவையில், நிதியமைச்சர் சமர்ப்பித்த திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், திருத்தப்பட்ட வற்வரி அதிகரிப்பு சட்டமூலமானது வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதுடன், நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் வற்வரி திருத்தச்சட்டமூலம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

vat

Related posts:

யாழ்ப்பாணத்திலும் கொரோனா அச்சம் - சுய தனிமைப்படுத்தலில் புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த இரு குடும்பங...
பொதுமக்களின் கவனக்குறைவும் பொறுப்பின்மையுமே கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் - பொது சுகாதார பரிசோதகர்...
நுரைச்சோலையில் சீன பொறியியலாளர்களின் சேவையை பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது...