திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் குறைக்கப்பட்டது நிதி – கிராம அபிவிருத்திக்கு ரூ.100 மில்லியனே தரப்படுமாம்!
 Thursday, July 26th, 2018
        
                    Thursday, July 26th, 2018
            கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுக்கும் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் அந்த நிதி பாதியாக வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபா நிதி போதாது என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அது மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
கூட்டு அரசினால் குருநாகல் மாவட்டத்தில் இந்த மாதம் 15 ஆம் திகதி கிராம அபிவிருத்தித் திட்டம் (கம்பிரெலிய) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையிலுள்ள 330 பிரதேச செயலகங்களுக்கும் தலா 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். 12 வகையான வேலைகள் அந்த நிதியில் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும். இவ்வாறு திட்ட அறிமுகத்தின்போது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தை கடந்த சனிக்கிழமை வடக்குக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் ஆரம்பித்து வைத்திருந்தனர்.
200 மில்லியன் ரூபாவுக்குரிய திட்டங்களை பிரதேச செயலகங்கள் தயாரித்துக் கொண்டிருந்த நிலையில் தலைமை அமைச்சரின் செயலரினால் அவசர அவசரமாக பிரதேச செயலகங்களுக்கு நேற்று கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்காக ஒதுக்கீடு 100 மில்லியன் ரூபா மாத்திரமே என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        