தலைக் கவச தடையின் இடைக்காலத் தடை மேலும் நீடிப்பு!
Thursday, November 17th, 2016
தலைக்கவச தடைக்கு எதிராக நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடைச் சட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(17) தீர்ப்பளித்துள்ளது.
முகமூடி தலைக்கவசம் அணிவதைத் தடை செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிராக பல சங்கங்கள் நீதிமன்றம் சென்றனர். இதன்போது, இச்சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குறித்த இந்த இடைக்காலத் தடையையே மீண்டும் நீடித்து தீர்ப்பளித்துள்ளது.இந்த வகை தலைக்கவசம் அணிவதை தடை செய்வதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று முறைப்பாடுகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

Related posts:
தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தம் - தேசிய ஔடத ஒழுங்குபடுத்தும் ஆணையகம்!
போத்தல் குடிநீரின் விலையை அதிகரிக்குமாறு குடிநீர் போத்தல் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை !
வளி மாசடைதல் மீண்டும் அதிகரித்துள்ளது - தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை!
|
|
|


