தலைக்கவசம் தொடர்பான வர்த்தமானி தற்காலிகமாக இரத்தானது!

Monday, April 10th, 2017

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமான இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.

குறித்த வர்த்தமானியில் அடங்கியுள்ள சில விடயங்கள் சர்ச்சைக்குரியது என முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அந்த சபையின் தலைவர் பேராசிரியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே, குறித்த அறிவித்தலை தற்காலிகமான இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், விரைவில் அதனை திருத்தி ஒரு மாத காலப் பகுதிக்குள் மீண்டும் வர்த்மானியில் வௌியிட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சிசிர கோதாகொட மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts:

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும் - சபாநாயகர் மஹிந...
அவல நிலைக்கு உள்ளாகியதற்கு இந்த நாட்டை எழுபத்து நான்கு ஆண்டுகள் ஆண்ட அனைத்து ஆட்சியாளர்களுமே காரணம் ...
சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நவீன தொழில்நு...