தரம் 1,2 மாணவர்களுக்கும் ஆங்கிலப் பாடம் அறிமுகம் !
Saturday, March 17th, 2018
தரம் 1,தரம்2 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று மீபே தேசிய கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது முதற் தடவையாக இந்தப் பாடப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப் படுகின்றன
இதுவரை அங்கிலப் பாடம் தரம் 3 இல் இருந்தே கற்பிக்கப்பட்டது தற்போது தரம் 1,2 க்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்;ளது .மகரகம தேசிய கல்வியல் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. பாடப்புத்தகத்துடன் இறுவட்டும் வழங்கப்படுகின்றது இந்தப் பாடத் திட்டத்தில் கதைகள் வரைதல்; ஆடல் பாடல்கள் பேசுதல் கதைத்தல் செயற்பாடுகள் அதற்கான உபகரணப் பாவிப்பு ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன
அறிமுக நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அதிதிகளாக கலந்து கொண்டு பாடப்புத்தகங்களை அறிமுகம் செய்தனர் .
Related posts:
பல்கலை பாடப்பரப்பிற்குள் தகவல் அறியும் சட்டமூலம்!
நடுநிலையாக செயற்படுங்கள் - ஊடக நிறுவனங்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் கோரிக்கை!
தேர்தல் தொடர்பில் 5,236 முறைப்பாடுகள் பதிவு - தேசிய தேர்தல் ஆணையகம் தகவல்!
|
|
|


