தமிழ் ஆசிரியருக்காக வீதிக்கு இறங்கியநெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி!

Wednesday, April 29th, 2026


…..
நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி தமிழ் பாட ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி பெற்றோர் கல்லூரி முன்பாக இன்று (29/04)மதியம்  ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்

உயர்தரம் மற்றும் சாதாரண தரம் ஆகிய வகுப்பின் தமிழ் பாடத்திற்கான ஆசிரியர் இரண்டு தினங்கள் றோ.க.மகளிர் கல்லூரியிலும் மூன்று தினங்கள் நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும் கற்பித்தலுக்காக இணைக்கப்பட்டிருந்த போதும் தற்போது முழுமையாக ஐந்து நாட்களும் ஆசிரியரை நெடுந்தீவு மகா வித்தியாலயத்துடன் இணைத்துள்ளதால் கல்லூரி மாணவிகள் பரீட்சைகள் நெருங்கிவரும் வேளையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்து பெற்றோர்கள் அமைதிவழியில் இடமாற்றத்துக்கான எதிர்ப்பினையும் தமிழ் ஆசிரியரை நியமிக்கக் கோரியும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்

தமது பிள்ளைகளின் தமிழ் பாடத்திற்கு உடனடியாக ஆசிரியரை நியமிக்குமாறும் நிலைமையினை கவனத்தில் எடுக்கக் கோரியும் பெற்றோர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இவ் விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் போன்றோருக்கு பெற்றோர்கள் சார்பில் மகஜர் கொடுக்கப்பட்டதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: