தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
Friday, March 11th, 2016
தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று(11) வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணிவரை அந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி இன்று பதினெட்டாவது நாளாகவும் உண்ணாவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகள் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


