தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா வாசிகள் நால்வர் அல்லைப்பிட்டி கடற்படையினரால் கைது!
Tuesday, May 3rd, 2022
தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா வாசிகள் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்து , அல்லைப்பிட்டி கடற்பகுதி ஊடாக இந்திய செல்ல முற்பட்ட வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இந்தியாவிற்கு அனுப்பவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட நபர்கள் தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
Related posts:
அபிவிருத்திக்காக பூரண பங்களிப்பு செலுத்துங்கள் - பான் கீ மூன் இலங்கை இளைஞர்களிடம் கோரிக்கை!
எதிர்வரும் 3 வருடங்களில் வடக்கில் 2500 வீட்டுத்திட்டத்தினை வழங்குவதே இலக்கு - அமைச்சர் சஜித்
எவரும் கைவிடப்படாத வகையில் “அஸ்வெசும” திட்டத்தை முன்னெடுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணி...
|
|
|


