தமது தயாரிப்புக்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது – 1 ஆம் திகதிமுதல் பால்மா சந்தைக்கு வரும் என மில்கோ நிறுவனம் அறிவிப்பு!
 Monday, March 21st, 2022
        
                    Monday, March 21st, 2022
            
தமது தயாரிப்புக்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என்று மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேறு எந்த நிறுவனமும் பால்மா விலையை அதிகரிக்குமாயின் அதுதொடர்பில் தமது நிறுவனம் கவனத்திற்கொள்ளாது என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமது நிறுவனம் மீண்டும் பால்மா உற்பத்தி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இவை அடுத்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
இதேவேளை, பால்மா விலை அதிகரிக்கப்பட்டால் பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டியிருக்குமென பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாவனையாளர்கள் கூடுதல் விலைக்கு பால்மாவை கொள்வனவு செய்ய மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது.
பால்மா ஒரு கிலோ சுமார் 2 ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 கிராம் பைக்கெட்டின் விலை 800 ரூபாவாகும். இவ்வாறான நிலையில் தமது நிறுவனங்களை நடத்துவதில் சிக்கலை எதிர்கொண்டிருப்பதாக இவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        