தபால் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை நிறுத்த வேண்டுமெனக் கோரிக்கை!
Wednesday, July 17th, 2019
தபால் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமென அஞ்சல்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமது சேவையில் சுயாதீன தன்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மையத்தின் பணியாளர்கள் நேற்று மாலை நான்கு மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பணியாளர்களின் பிரச்சினைகளை தாம் அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், எனவே அஞ்சல் பணியாளர்கள் போராட்டத்தை கைவிடுமாறும் ஹலீம் கோரியுள்ளார்.
Related posts:
25 ஆம் திகதி முதல் முத்திரை கண்காட்சி!
எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் - நோயியல் பிரிவின் பணிப...
வசூலிக்கப்படும் சராசரி வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான புதிய சுற்றறிக்கை - வங்கி ஆளுநர் கலாநிதி நந்...
|
|
|


