தன்னிச்சையாக சம்பளம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் அரச நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலம் – நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!
Tuesday, March 5th, 2024
அரச நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனைத்து அரச நிறுவனங்களும் தன்னிச்சையாக சம்பளம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இந்த சட்டமூலம் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் நேற்றையதினம் (04) அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மன்னாரில் இன்று பிரதமரால் திறந்து வைப்பு!
வார இறுதிக்கு அடையாள அட்டை இலக்க முறை செல்லுபடியாகாது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண!
பெற்றோல் - டீசல் தரையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பம் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறவிப்பு!
|
|
|


