தனியார் வைத்தியசாலை சத்திரசிகிச்சைகளுக்கு நிர்ணயக் கட்டணம்!
Thursday, May 5th, 2016
நாட்டிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் நடத்தப்படும் சத்திரசிகிச்சைகளுக்கு அறவிடப்படும் பணத்தை வரையறை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இத தொடர்பில் ஆராய்வதற்கு சுகாதார அமைச்சினால் குழுவொன்று நியமிக்கபட்டுள்ளதாக அந்த அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.இந்த குழுவின் அறிக்கை கிடைத்ததன் பின்னர் தனியார் வைத்தியசாலைகளில் நடத்த்ப்படும் ஒவ்வொரு சத்திரசிகிச்சைகளுக்கும் தனித்தனியாக அறவிடப்படும் கட்டணம் வரையறை செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இதன் ஊடாக அனைத்து தனியார் வைத்தியசாலைகளிலும் ஒரே கட்டண அடிப்படையில் சத்திர சிகிச்சைகளை நடத்த முடியும் எனவும் குறிப்பிடப்படுள்ளது.
தற்போது வெவ்வேறு தனியார் வைத்தியசாலைகளில் பல்வேறு வகைகளில் கட்டணம் அறவிடப்படுவதால் சாதாரன சத்திரசிகிச்சைகளிலும் கூட பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
புகையிரதக் கட்டணம் அதிகரிப்பு!
ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்கு சீனா ஒரு மாதகால தடை - சீனா அறிவிப்பு!.
புதிதாக திருமணம் செய்யும் இளைஞர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை - ஆய்வில் அதிர்ச...
|
|
|


