தனியார் பேருந்தில் பயணச்சீட்டின்றி பயணித்ததால் அபராதம்!

தனியார் பேந்துகளில் பயணச்சீட்டின்றி பயணிக்கும் பயணிகளிடம் தண்டப்பணம் அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.பீ.ஏ. ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்-
தற்போது தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டுக்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும் சில பேருந்துகளில் இது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. புதிய வேலைத்திட்டத்திற்கமைய, பயணச்சீட்டுக்களை வழங்குமாறு பயணிகளால் நடத்துனருக்கு அழுத்தம் விடுக்கப்பட்டு வருகின்றது. புதிய சட்டத்திற்கமைய பயணச்சீட்டின்றி பயணிக்கும் பயணியொருவர் பேருந்து கட்டணத்தைப் போன்று இரு மடங்கு பணத்தை செலுத்த வேண்டும் என்பதுடன் 2000 ரூபா அபராதமும் விதிக்கப்படும்.
இதற்கு மேலதிகமாக குறித்த பேருந்து நடத்துனரின் அனுமதிப்பத்திரமும் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
|
|