தனியாருக்காகவே மின்வெட்டு – குற்றஞ் சுமத்துகிறார் இலங்கை மின்சார தொழிற்சங்கத்தின் பிரதம செயலாளர்!

தனியார் துறையினரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்யும் நோக்கிலேயே மின் வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது என இலங்கை மின்சார தொழிற்சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சாரசபையை ஆரம்பித்து எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் ஐம்பது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இந்த ஐம்பது ஆண்டுகளில் பிரச்சார நோக்கத்திற்காக கூடுதலாக செலவிட்ட மின்சாரசபை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கவில்லை.
மின்சார தேவை மின்சார விநியோகம் என்பன குறித்து கவனம் செலுத்தி சரியான தீர்வுத் திட்டங்களை முன்மொழிவதற்கு மின்சாரசபை திட்டமிடவில்லை.
நாடாளுமன்றில் ஓர் மின் தூக்கி செயலிழந்தவுடன் அனைத்து மின் தூக்கிகளையும் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் மின்சாரப் பிரச்சினை பற்றி அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை.
மின் வெட்டு காரணமாக நாட்டின் உயர் மட்டப் பிரபுக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது சாதாரண மக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|