தனிப்பட்ட விஜயமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியா பயணம் – நாளை திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி தரிசனத்தில் பங்கேற்பார் எனவும் தெரிவிப்பு!

இரண்டுநாள் பயணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இன்று (23) முற்பகல் திருப்பதி விமான நிலையத்தை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விஜயத்தின் போது திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஈடுபடவுள்ளார். பிரதமருடன் அவரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸவும் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
நாளை வௌ்ளிக்கிழமை வெங்கடேஸ்வர சுவாமி தரிசனத்தில் பிரதமர் ஈடுபடவுள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகளை திருமலை, திருப்பதி தேவசம் போர்ட் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வட மாகாண சபை மீண்டும் இனவாதத்தினை தூண்டுகிறது! அமைச்சர் மஹிந்த அமரவீர
இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான இராஜதந்திர தொடர்பின் 60 ஆண்டுகள் நிறைவு வைபவம்!
புத்திஜீவிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி!
|
|