தனிப்பட்ட பகை – யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு தாக்குதல் – தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி!

யாழ்ப்பாணத்தில் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. நீர்வேலி பகுதியில் நேற்றையதினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
நீர்வேலியை சேர்ந்த 24 வயதுடைய கணேசரத்தினம் வேனுஜா மற்றும் அவரது தயாரான 65 வயதுடைய கணேசரத்தினம் யோகேஸ்வரி ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் தாயும் மகளும் இருந்த வேளை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர், தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு , தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , தனிப்பட்ட பகை காரணமாகவே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சமகால அரசியல் நிலைப்பாட்டினை தொடர்ந்தும் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் -ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசப...
கடந்த 7 மாதங்களில் 282 கொலைகள், 992 பாலியல் வல்லுறவு, 1779 கொள்ளை!
படகு கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழில் திறனை மேம்படுத்த இலங்கை கடற்படை நடவடிக்கை!
|
|