தஜிகிஸ்தான் ஜனாதிபதி நாளை இலங்கை விஜயம்!
Sunday, December 11th, 2016
தஜிகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் இறையதினம் தினம் இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் எனஇலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரை எமோமாலி ரஹ்மான் சந்திக்கவுள்ளார்.
குறித்த சந்திப்பின் போது இலங்கை தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுப்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள எமோமாலி ரஹ்மான், அன்றைய தினம் இலங்கை வர்த்தக சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
காணி உரிமங்களை பெற்றுக்கொள்ள உதவி புரியுங்கள் - அரியாலை கிழக்கு பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியி...
பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் பல்கலைக்குள் உள்நுழையத் தடை - விடுதியை விட்டு வெளியேறவும் பணிப்பு!
ஜனாதிபதி ரணில் உத்தரவு - வடக்கில் படையினர் வசமிருந்த 108 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு!
|
|
|


