தகவல் தொழில்நுட்ப பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு!

2017ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இந்தப் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக பார்வையிட முடியும்.
அத்துடன் பெறுபேறுகளை அனைத்து பாடசாலைகளுக்கும் தபால் மூலம் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
குறித்த பரீட்சைக்காக 169,412 பேர் விண்ணப்பித்திருந்ததுடன், 158,805 பேர் தோற்றியிருந்தனர்.
Related posts:
ஏப்ரலில் மிக குறைவான மழை வீழ்ச்சி! – வளிமண்டலவியல் திணைக்களம்
தனியார் பேருந்தில் பயணச்சீட்டின்றி பயணித்ததால் அபராதம்!
இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி - இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அறிவ...
|
|