டெல்டா வைரஸ் சமூகத்திற்குள் பரவியுளளது என்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை – சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு!

Saturday, June 26th, 2021

உலக நாடுகளில் வேகமாக பரவிக் கொண்டுள்ள டெல்டா வைரஸ் தொற்றானது தற்போது திரிபுபட்ட வைரஸாக மாற்றமடைந்து பரவுகின்ற காரணத்தினால் அது குறித்து இலங்கையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் நாட்டின் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளமையானது ஆரோக்கியமானதல்ல எனவும் எச்சரித்துள்ளனர்.

இப்போது பரவும் டெல்டா வைரஸ் நாட்டிற்குள் வேகமாக பரவ ஆரம்பித்தால் மீண்டும் பொது முடக்கத்துக்கு செல்ல வேண்டி வரும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை டெல்டா வைரஸ் சமூகத்திற்குள் பரவியுளளது என்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள ஐவர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மருத்துவர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.

மாதிரிகளின் மரபணுவரிசை முறையினை ஆராய்ந்துவருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தொடர்ந்தும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் நாட்டின் ஏனைய பகுதிகளிற்குள் வைரஸ் பரவலாம் என்ற அச்சம் தொடர்ந்தும் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: