டெல்டா பிறழ்வின் ஐந்தாவது அலையும் ஏற்படும் அபாயமுள்ளது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
 Wednesday, August 25th, 2021
        
                    Wednesday, August 25th, 2021
            
டெல்டா கொரோனா வைரசினால் ஏற்படக்ககூடிய ஆபத்துக்களை அதிகாரிகள் உணர்ந்துகொண்டு ஆபத்தான ஐந்தாவது அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தொடர்ச்சியான முடக்கல்களால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் வுகான் கொரோனா பரவலுக்கு பின்னர் ஏற்பட்ட பிறழ்வுகள் மிகவும் ஆபத்தானவை என தெரிவித்துள்ள குறித்த வைத்தியர் சங்கம் எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தான மாற்றமடைந்த வகைகள் உருவாகலாம் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் வுகான் வைரஸ்களை விட அல்பா டெல்டாவினால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன என எச்சரித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வைத்திய அதிகாரி செனால் பெர்ணான்டோ இந்த வைரஸ்கள் வெளிப்படுத்தும் தடுப்பூசிகளிற்கான எதிர்பாற்றலையும் நாங்கள் கருத்தில்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்ட பின்னரும் பாதிக்கப்படுபவர்கள் உயிரிழப்பவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகும் காலத்தில் நாங்கள் இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது மிகவும் ஆபத்தான உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய வலுவான கொரோனா வைரசினை எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள செனால் பெர்ணான்டோ இதன் காரணமாக நாங்கள் நிலைமையை உணர்ந்து இன்னுமொரு பிறழ்வடைந்த வைரசினை எதிர்கொள்ள தயாராகவேண்டும் – இந்த பிறழ்வடைந்த வைரஸ் ஐந்தாவது அலைக்கு வித்திடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        