டெல்டா ஆதிக்கம் செலுத்த தொடங்கினால் நிலைமை மோசமாகும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
Monday, July 19th, 2021
இலங்கையில் டெல்டா கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக மாறும் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
அத்துடன் நிலைமையின் பாரதூர தன்மையை அரசாங்கமும் பொதுமக்களும் உணர்ந்துகொள்ளவிட்டால் நாடு மிகவும் ஆபத்தான நிலையை எதிர்கொள்ளும் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.
அதேநேரம் டெல்டா வைரஸ் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் வைரசாக மாறினால் முன்னைய அலைகளை விட மோசமான நிலைமையை இலங்கை எதிர்கொள்ளும் எனவும் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் கண்டுபிடிக்கப்படும் டெல்டா கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் சுகாதார அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளனர் என உபுல்ரோகண தெரிவித்துள்ளார். இந்த பேரிடரை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கமும் பொதுமக்களும் எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளாந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் குறைஏற்படவில்லை ஆனால் பிசிஆர் சோதனைகள் செயற்கையாக குறைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


