டெங்கு: 5 மாதங்களில் 150 பேர் பலி!
Monday, June 12th, 2017
நாட்டில் இந்த வருடத்தில் முதல் 5 மாதங்களில் மாத்திரம் டெங்கு தொற்று காரணமாக, 150 பேர் வரையில் மரணித்துள்ளதாக, சுகாதார சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் தினங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளமையினால், நுளம்புகள் பரவக்கூடிய வகையிலான இடங்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியுள்ளதாக, சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த 6 மாதங்களில் மாத்திரம் 59 ஆயிரத்து 760 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதில் 43 சதவீதம் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என, சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கைச் சிறைகளில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 458 கைதிகள்!
கொரோனா சிகிச்சை: இலங்கைக்கு பெருந்தொகை மருந்துகளை அனுப்பியது இந்தியா!
சிறார்கள் இலத்திரனியல் திரைகளுடனும் நேரத்தை செலவிடக் கூடாது - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
|
|
|


