டெங்கு பரவும் வகையில் சூழல் இருந்தால் நடவடிக்கை!

டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளின் பிரதானிகளுக்கு தண்டனை விதிக்கும் வகையிலான சட்டத்தை தயாரிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள சட்டத்திற்கு அமைய சிறிய ஊழியர்களுக்கு மட்டுமே இது தொடர்பில் தண்டனை விதிக்கப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சில், பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
அனைத்து பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாணவர் அடையாளக் குறியீடு அறிமுக - கல்வ...
மின்சார தேவை அதிகரிப்பு - நாடு முழுவதும் இன்றும் இரு மணிநேர மின்வெட்டு - பொதுப் பயன்பாட்டுத் திணைக...
எல்லைதாண்டிய இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேர் இலங்கை கடற்படையால் கைது!
|
|
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு கடும் காற்றுடன் கூடிய மழை - 55 பேர் பாதிப்பு என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...
கைதிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – அமைச்சர் விஜயதாச ராஜபக்...
சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்த இந்திய - இலங்கை நாடுகள் முயற்சி - இலங்கைக...