டெங்கு நோய் பரவுவதற்கு குப்பைகளே காரணம்- சுகாதார அமைச்சர்

அதிகரித்து வரும் குப்பைகள் தான் கொழும்பில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு காரணம் என்று சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையை விரைவாக சமாளிக்கத் தவறினால் சூழ்நிலை மேலும் மோசமாகும் என்றும் அவர் எச்சரித்தார்.
கடந்த ஏப்ரலில் கொழும்பில் குப்பை மேடு சரிந்ததில் 30ற்கும் அதிகமானோர் உயிரிழந்ததை தொடர்ந்து நகரில் குப்பைகளை அள்ளும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது.தெருக்களில் தேங்கும் அழுகிப்போன குப்பைகள் அதிகரித்து வருவதால் கொசுக்களின் இனப்பெருக்கும் அதிகரித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலால் இருநூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
கூட்டுறவு வேலைத் திட்டங்களில் 3,000 அங்கத்தவர்கள் இணைப்பு!
வளிமண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் - பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் நிறைவு!
|
|