டெங்கு நோயாளர்களுக்கு தனியான வசதி – அமைச்சர்  ராஜித சேனாரத்ன!

Sunday, April 23rd, 2017

நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பதற்கென தனியான வார்ட் வசதிகள் உருவாக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் தொடர்பில் பல அமைச்சுக்களின் பிரதானிகளுடன் கலந்தாலோசிக்கப் பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்களுக்கான தனியான பிரிவு அவசியமாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மேல் மாகாணத்தில்  டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்கை அளிப்பதற்கு அங்கொடை மற்றும் நீர்கொழும்பு தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால் நோயாளர்கள் இருக்கும் பகுதியிலேயே டெங்கு நோயாளர்களும் சிகிச்சை பெறுவதால் பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளன. தற்போது கட்டுமான பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவும்  சூழலை வைத்திருப்பார்களாயின் குறித்த கட்டடத்திற்கான அனுமதிப் பத்திரத்தினை ரத்துச் செய்வதற்கும் தீர்மானித்துள்ளோம். மேலும் பாடசாலை விடுமுறை காலமாவதால் பாடசாலைகள் தொடங்கும் முன்னர் அனைத்து பாடசாலைகளினதும் சுற்றுச்சூழல்களிலும் டெங்கு நுளம்பு பரவாதவாறு பாதுகாப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்து  பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்களும்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

Related posts:

கொழும்பில் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை - கொழும்பு மாவட்ட செயலாளர் அறிவ...
சுகாதார மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்றே அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்கின்றது – ஊரங்டங்கு நீட...
நாட்டில் தொற்றா நோய்களின் பரவல் வேகமாக அதிகரிப்ப - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

குறைந்த வருமானம் பெறுவோரை அரச போக்குவரத்து சேவையில் இணைக்க தீர்மானம் - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர...
யாழ் மத்திய கல்லூரிக்கு கல்லூரியின் பேருந்து குழுமத்தால் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து வழங்கிவைப...
இணைய வழி கடவுச்சீட்டு முறைமையில் 3 ஆயிரத்து 265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் - குடிவரவு மற்றும் குடியக...