டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது – தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!
Saturday, July 20th, 2024
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயினால் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 30,663 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர் எனவும் அவர்களின் மொத்த எண்ணிக்கை 7,119 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுப்புறச் சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறும் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மருந்துப்பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!
அறிவியல் நகரைத் தந்த ஆற்றல் மிகு கரங்களுக்கு அதிகாரத்தை வழங்குங்கள் - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கிய...
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் மரண தண்டனை - அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!
|
|
|


