டெங்கு தொற்று – கொழும்பு கண் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவு பூட்டு!
Tuesday, June 18th, 2019
வைத்தியசாலை ஊழியர்கள் சிலர் டெங்கு நோய்க்கு உள்ளாகியமை காரணமாக நேற்று முதல் கொழும்பு கண் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வைத்தியசாலையில் 15 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதால் இந்தத் தீர்மானம் மருத்துவமனை செயற்குழுவினால் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, குறித்த மருத்துவமனையில் நடைபெறவிருந்த அனைத்து சத்திரசிகிச்சைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர சிகிச்சைகளுக்கு தினம் குறிக்கப்பட்ட நோயாளர்களை களுபோவில மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Related posts:
அதிகாரம் உள்ளதென்பதால் நடத்த முடியாது – மஹிந்த தேசப்பிரிய
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன - அமெரிக்கத் தூதர் முக்கிய சந்திப்பு!
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும் - பரீ...
|
|
|


