டாக்காவில் முன்னாள் ஜனாதிபதி உரை!
Monday, May 22nd, 2017
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு சென்றுள்ளார்.
பங்களாதேஷிலுள்ள சர்வதேச மூலோபாய ஆய்வுகள் தொடர்பான நிறுவனத்தில் நாளை உரையாற்றவுள்ளார்.பிளவுபட்ட சமூகத்தினிடையே சமரசம் , ஜனநாயகத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லாட்சி என்பன தொடர்பில் இலங்கையிடமிருந்து பாடத்தை கற்றுக்கொள்ளல் என்ற தலைப்பில் இவர் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு உரையாற்றவுள்ளார்.
இந்த நிறுவனம் பங்களாதேஷ் அரசாங்கத்திற்கு சொந்தமான தேசிய ஆய்வு மற்றும் ஆய்வு நிறுவனங்கள் மூலமான விடயங்களை மேம்படுத்துதல் சர்வதேச விவகாரம் பாதுகாப்பு அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களையும் முன்னெடுக்கின்றது.
Related posts:
பிரதமர் ரணில் சீனா பயணம்!
இழப்புகள் அர்த்தமுள்ள வகையில் அரசியலாக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத...
இந்திய நிவாரணப் பொதியில் 20,000 பொதிகளை கிளிநொச்சி மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் - மாவட்ட அரச...
|
|
|


